தோல்வியை ஒப்புக்கொண்டாரா தமிழிசை?.." தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் " - தமிழிசை சவுந்தரராஜன்!!
I accept whatever the results of the election Tamilisai Soundararajan
இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் இன்று எண்ணப்பட்டு வரும் தொடர்ந்து பின்னடைவில் இருக்கும் தென் தன்னை தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.
அந்த வகையில் இன்று மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது, இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி 296 தொகுதிகளில் முன்னிலை வகித்து பதிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கூட்டணி ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதியில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டு திமுகவை சேர்ந்த தமிழிச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறிகையில், அனைத்து அரசியல்வாதிகளும் தலைவரும் தங்களின் நம்பிக்கையே இந்த நேரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஜனநாயக நடைமுறையை உலகம் முழுவதும் பாராட்டுகிறது. தேர்தலில் என்ன முடிவு வந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன். நான் நம்பிக்கையானவள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது மக்களுக்கானது. நான் என்றென்றும் மக்கள் சேவை செய்வேன் என்று கூறியுள்ளார்.
English Summary
I accept whatever the results of the election Tamilisai Soundararajan