'தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் மகிழ்ச்சி'; பவன் கல்யாண் பேட்டி..!
I would be happy if AIADMK joins the National Democratic Alliance Pawan Kalyan interview
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் மகிழ்ச்சி என ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் மகிழ்ச்சி என்றும், எம்.ஜி.ஆர் தோற்று வித்த அதிமுக கட்சி சிறப்பாக இருக்க வேண்டும் எனவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே பொருந்திய கட்சி அதிமுக, எனவே மீண்டும் பொருந்தலாமே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகச்சிறந்த தலைவர் எனவும் அவருக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் பல திமுக எம்பிக்கள் இந்தியில் பேசுகிறார்கள். ஆனால், பொதுமக்கள் முன் வந்து இந்தியை எதிர்க்கிறார்கள் என்றும், கண்மூடித்தனமாக எதிர்ப்பதை நான் விரும்பவில்லை. காலம் மாறிவிட்டது என தெரிவித்துள்ளார்.அத்துடன், தேசிய கல்வி கொள்கை இந்தியை திணிக்கவில்லை. ஆனால், திணித்தால் நானே எதிர்ப்பேன்.என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
I would be happy if AIADMK joins the National Democratic Alliance Pawan Kalyan interview