கூட்டணியில் நீடித்தால் "பிரதமர் வேட்பாளர்" நிதீஷ் குமார்.!! உசுப்பிவிடும் அகிலேஷ் யாதவ்.!!
If Nitish continue India alliance he will become prime minister
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியா ஐக்கிய ஜனதா தளம் இருந்து வரும் நிலையில் மாநில அரசியலில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக ஆதரவோடு மீண்டும் ஒன்பதாவது முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் வரும் ஜனவரி 28ஆம் தேதி வாக்கில் நடைபெறும் என பீகார் மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வரும் இந்த சூழலில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில ஆளுநர் அளித்த தேனீர் விருந்து பீகார் மாநில துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளவில்லை.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள இந்த சூழலில் நிதீஷ் குமார் வெளியேறி பாஜகவுடன் கைகோர்க்க இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் இண்டியா கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ள கருத்து இண்டியா கூட்டணிக்குள் மீண்டும் ஒற்றுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது "நிதீஷ் குமார் தொடர்ந்து இந்தியா கூட்டணியில் இருந்தால் பிரதமர் ஆகலாம் இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் பிரதமராக பரிசளிக்கப்படலாம் நிதிஷ்குமார் அதற்கு தகுதியான சிறந்த போட்டியாளர் நிதீஷ்குமார் கூட்டணி அமைய முன்னிருப்புகளை செய்து கூட்டணியை உருவாக்கினார்.
காங்கிரஸ் கட்சி முன்வந்து பலம்மிக்க மாநில கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதிஷ்குமார் செல்ல மாட்டார் என நம்புவதாகவும், அவர் இண்டியா கூட்டணியை மேலும் பலப்படுத்துவார் எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
If Nitish continue India alliance he will become prime minister