பாராளுமன்றத்தில் ஒலித்த இளையராஜா பெயர்..., ஏமாந்து போன உறுப்பினர்கள்.!
Ilayarajas name sounded in the Parliament
மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் பதவிக்கு இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத், தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
![](https://img.seithipunal.com/media/PARLIAMENT 02.jpg)
இதனை தொடர்ந்து, இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டோர்கள் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
பின்னர், மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு "இளையராஜா" என்று அழைத்தார். அவையில் இருந்த உறுப்பினர்கள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தவே, இளையராஜாவை காணவில்லை. பின்புதான் தெரிந்தது இன்று அவைக்கு வரவில்லை என்று.
![](https://img.seithipunal.com/media/PARLIAMENTHOUSE.jpg)
இசையமைப்பாளர் இளையராஜா, அமெரிக்காவிற்கு சென்றுள்ளதால் இன்றைய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்க இயலவில்லை என தெரியப்படுகிறது. மேலும், இந்த மழைக்கால கூட்டத்தொடரின் வரும் நாள்களில் இளையராஜா மற்றும் பி.டி.உஷா ஆகிய இருவரும் பதவியேற்றுக் கொள்வார்கள்.
English Summary
Ilayarajas name sounded in the Parliament