முடியவே முடியாது! பாஜக தொடர்ந்த வழக்கில், தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


பாஜகவின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில் பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இரு சக்கர வாகன பேரணி நடத்தப்படும் என்று தமிழக பாஜக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

ஆனால் இந்த இருசக்கர வாகன பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருசக்கர வாகன பேரணி அனுமதி கேட்டு பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது..

இந்த வழக்கை இன்றே அவசர வழக்காக விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், பேரணி செல்லும் இடங்களில் வாகன நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், பாஜகவின் பேரணிக்கு காவல்துறை முழுமையாக அனுமதி மறுக்க முடியாது என்றும், இதுகுறித்து பதில் அளிக்க கோரி காவல்துறைக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Independence day BJP bike road show TN police High court orderHigh court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->