தொடங்கியது இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம்! - Seithipunal
Seithipunal


18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதையடுத்து ஆட்சியமைக்க தேவையான 272 இடங்களை காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே பெறவில்லை. பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் தனித்து வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில் இரு கட்சிகளும் உள்ளன. அதே சமயம், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளதால் அக்கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் காங்கிரசின் இந்தியா கூட்டணி 234 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சியமைக்க இன்னும் 38 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாலை ஏழு மணியளவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணியினர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். சுயேச்சை, மற்றும் சிறு சிறு கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து தாங்கள் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா என்று விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்குதேசம் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்தால் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவை ஏற்கனவே தாங்கள் பாஜக கூட்டணியில் இருப்பதாக அறிவித்து விட்டன. எனவே மத்தியில் அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIA Alliance Meeting Started in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->