''இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இல்லை; ஆதலால் டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது''; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..! - Seithipunal
Seithipunal


டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.ஆம் ஆத்மி, பா.ஜ.க, மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

கடந்த 05-ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில், 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதனை தொடர்ந்து டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 

இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல பிற மாநிலங்களில் இல்லை. அதனால்தான், டெல்லியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India alliance parties are not united hence BJP has won in Delhi says Marxist Communist


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->