கொடுக்கல் வாங்கல்! "முடிந்தவரை" ஒன்றாகப் போட்டியிட முடிவு! I.N.D.I.A கூட்டணி தீர்மானம்! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். நேற்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நிறைவடைந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்தில் "எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) கட்சிகள் கூட்டாக போட்டியிடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்தியக் கட்சிகளாகிய நாங்கள், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இயன்றவரை ஒன்றாகப் போட்டியிடுவதற்கு இதன்மூலம் தீர்மானித்துள்ளோம். வெவ்வேறு மாநிலங்களிலும் தொகுதி பகிர்வு உடனடியாகத் தொடங்கப்பட்டு, கொடுக்கல் வாங்கல் ஒத்துழைப்போடு கூடிய விரைவில் முடிக்கப்படும்.

இந்தியக் கட்சிகளாகிய நாங்கள், பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய விரைவில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடிவு செய்கிறோம்" என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றும் விதமாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராகும் விதமாக இந்தியா கூட்டணி தேர்தல் காலத்தில் குறித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Alliance resolved to compete as unitedly as possible


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->