இண்டியா கூட்டணி வெற்றி பெற்ற அடுத்த 48 மணி நேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படுவார் - ஜெயராம் ரமேஷ்!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி ஒரு தீர்மான ஆணையை பெறும். அதன் பின்னர் 48 மணிநேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படலாம் என காங்கிரஸ் செய்தி தொடர்பு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறிவுள்ளார்.

மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்ககளாக நடந்து வரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் 1 ம் தேதி 7ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை வெல்லும் என பாஜக தலைவர்கள் பிரச்சாரதிற்கு பிரச்சாரம் கூறிக்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கவில்லை. மத்திய அமைச்சர் அமித் ஷா இண்டியா கூட்டணியில் ஆண்டுக்கு 1 பிரதமர் என மொத்தம் 5 பிரதமர்கள் என விமரிசித்து வருகிறார்.

இந்தநிலையில்,ஜூன் 1 ம் தேதி காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் இண்டியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் வேட்பாளர் எப்போது அறிவிக்கப்படுவார் என்ற கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இரண்டே வித்தியாசம்தான் உள்ளது. இண்டியா கூட்டணி நேர்மை மற்றும் மனித நேயத்துடன் செயல்படுகிறது.

தொடர்ந்து பேசிய  ஜெயராம் ரமேஷ், பெருன்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் இண்டியா கூட்டணி கைப்பற்றும்.மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி ஒரு தீர்மான ஆணையை பெறும். அதன் பின்னர் 48 மணிநேரத்தில் பிரதமர் தேர்வு செய்யப்படலாம். அதிக எண்ணிக்கையில் எம்.பி களை பெரும் கட்சிக்கே தலைமை பதவி வழங்குவது இயற்கை என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

india alliance won next 48 hour pm candidate announced


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->