எங்களின் சிறந்த நண்பன் இந்தியா தான் - ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உருக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - ரஷியா இடையேயான உச்சி மாநாடு இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் பங்கேற்று உரையாடினர். இதில், இரு நாடுகள் இடையேயான நல்லுறவுகளை வலுப்படுத்துவது, திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசியதாவது, "மிகப்பெரிய சக்தியாகவும், நம்பகமான நண்பனாகவும் இந்தியாவை நாங்கள் கருதுகிறோம். எங்களின் சிறந்த நண்பன் என்றால் அது இந்தியா தான்.


 
இந்தியா காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ரஷியாவின் நண்பன். இரு நாடுகளின் உறவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சியடைய நான் விரும்புகிறேன். 

ரஷியாவில் இருந்து கூடுதல் முதலீடு வர உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான முதலீடு 38 பில்லியனை நெருங்கிவிட்டது. ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாங்கள் பெரிதும் இந்தியாவுக்கு ஒத்துழைக்கிறோம். 

இந்திய-ரஷ்யா இணைந்து அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளோம். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து நாங்கள் கவலைகொள்கிறோம். பயங்கரவாதம் பற்றி இயற்கையாகவே நாங்கள் கவலைப்படுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பது போதைப்பொருள் கடத்தல், குற்றங்களுக்கு எதிரான சண்டையுமாகும்." என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Russia summit Russian President Vladimir Putin speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->