இனி வாலாட்ட முடியாதோ! நிர்மலாவுக்கு முக்கிய பொறுப்பு? கலக்கத்தில் அண்ணாமலை!
Info Nirmala is going to appoint as top incharge for TN BJP
தமிழகத்திலிருந்து எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் குறிப்பிட்டு தகுந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு மிக்க கட்சியாக இருந்த அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விரட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக தலைமையில் இருந்து வெளியான அறிக்கையால் பாஜக தலைமை அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பல்வேறு வழிகளில் அதிமுகவை சமாதானம் செய்யும் முயற்சி படலங்கள் தொடர்ந்து நிலையில் அனைத்தும் அண்ணாமலையால் வீணாய் போனது. இதனால் பாஜக தலைமை அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்த நிலையில் அவர்களை சமாதானம் செய்யும் நோக்கில் இன்று அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்ற அண்ணாமலையை பல முக்கிய தலைவர்கள் சந்திக்க மறுத்ததை அடைத்து முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைப்படி இன்று மாலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெருக்கமாக இருந்ததால் பல்வேறு விவகாரத்தில் அண்ணாமலை தப்பித்து வந்த நிலையில் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தமிழக பாஜகவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அறிக்கை தயாரித்து டெல்லி தலைமையிடம் சமர்ப்பித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
முன்னதாக டெல்லியில் முக்கிய தலைவர்கள் அண்ணாமலையை சந்திக்க மறுத்ததால் அதிமுக விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டிற்கான பாஜக மேலிட பொறுப்பாளராக இருக்கும் பி.எல் சந்தோஷை சந்திக்க சொல்வார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாமலைக்கு அதிர்ச்சி தரும் விதமாக நிர்மலா சீதாராமன் சந்திக்க வேண்டும் என பாஜக மேலிடம் உத்தரவிட்டதாம்.
இதனால் தான் அண்ணாமலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து பேசி உள்ளார். இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் வெளியாகி உள்ளது. தற்போது தமிழ்நாட்டிற்கான பாஜக மேலிடப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பி.எல் சந்தோஷ் மாற்றப்படக்கூடும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பதிலாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இனி தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளராக செயல்படுவார் எனவும் வெள்ளி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநில பொது தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு பி.எல் சந்தோஷ் மற்றும் அண்ணாமலை தான் முக்கிய காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சென்ற அறிக்கையால் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்த தலைமைக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய விவகாரத்தால் அண்ணாமலை மற்றும் அவருக்கு ஆதரவாளராக செயல்பட்டவர்கள் மீது டெல்லி தலைகள் கடும் கோபத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
அதை வேளையில் அண்ணாமலையை கடுமையாக எதிர்த்து வந்தவர்கள் தற்போது நடைபெறும் நிகழ்வுகளை கண்டு மகிழ்ச்சியில் உச்சத்தில் இருப்பதாகவும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடும் கலக்கத்தில் இருப்பதாகவும் பாஜக வட்டாரங்களே தெரிவிக்கின்றன.
English Summary
Info Nirmala is going to appoint as top incharge for TN BJP