சுக்குநூறாக உடையும் த.மா.கா.. எடப்பாடியை சந்திக்கும் ஈரோடு புள்ளி.!! அதிமுகவில் இணைய திட்டம்.? - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜா சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விளங்கி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். 

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையின் நிலை செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். 

இது குறித்து ஜி.கே வாசனைக்கு எழுதிய கடிதத்தில் "தற்போதைய அரசியல் சூழலில் தங்கள் எடுத்துள்ள பாஜக கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியில் ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்" குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரபரப்பு வழங்குவதற்குள் அடுத்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் நிலையில் யுவராஜாவும் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info TMC yuvaraja again meet EPS and join AIADMK


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->