மதபிரிவினையை ஏற்படுத்த துடிக்கும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - இந்திய தேசிய லீக்.!
INL say about tn governor
இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஆளுநர் பேசுகையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். இவர்கள் மறுவாழ்வு மீட்பு மையம் போலவும், மாணவர்கள் அமைப்பைப் போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்தத்தில் நாட்டைச் சீர்குலைக்கவே இந்த அமைப்பு இயங்கி வருகின்றது என விஷமனத்தான கருத்துக்களை ஆளுநர் பேசியிருப்பது இந்திய தேசிய லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மதபிரிவினை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. தமிழகத்தில் சகோதரத்துவத்துடன் பழகிய வரும் இந்து இஸ்லாமிய சொந்தங்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். எந்த ரூபத்திலாவது தமிழகத்தில் மதமோதலை உருவாக்கி விட முடியாத என்று நினைக்கும் ஆர்எஸ்எஸ் போன்ற மதவாத சக்திகளின் குரலாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த போது, உணவின்றி தவித்த சாலையோர மக்களுக்கு உணவளித்தோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து பூர்த்தி செய்யும் பணியை செம்மனே செய்வதவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர். அதே போன்று கொரோனா உயிரிழந்த தனது தாய், தந்தை உடலை கூட தொட மறுத்தவர்களின் இந்துக்களின் உடலை துணிந்து அடக்கம் செய்யும் பணியை செய்தவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர்.
இந்த பணியை தமிழகத்தில் மட்டும் செய்யவில்லை, நாடு முழுவதும் இந்துக்களின் ஆயிரகணக்கான உடல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தங்களை உயிரை பணயம் வைத்து செய்தனர். பல்வேறு பேரிடர் காலங்களில் முதல் ஆட்களாக களத்தில் நின்று நிவாரண பணியை மேற்கொள்ளும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரின் தியாகத்தை மறைக்கும் வகையில் ஆளுநர் அவதூறு பரப்பு வகையில் பேசிய கருத்துக்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மாணவ செல்வங்கள் கலந்து கொண்டுள்ள கல்லூரி நிகழ்ச்சியில் மதபிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டுமென இந்திய தேசிய லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்திய தேசிய லீக் அனைத்து வகையில் துணை நிற்க்கும் என்பதையும் உறுதிப்பட தெரிவித்துக் கொள்கிறோம்"
இவ்வாறு அந்த அறிக்கையில் முனிருத்தீன் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
English Summary
INL say about tn governor