மதவாத சக்திகளின் சதி வலையில் திமுக அரசு சிக்கிவிடக் கூடாது - முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய தேசிய லீக் அறிவுறுத்தல்.!
INL Tamilnadu say about tripur issue
திருப்பூர் வேலம்பாளையம் பள்ளிவாசலுக்கு சீல் உடனே அகற்றுக, தமிழக அரசுக்கு இந்திய தேசிய லீக் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜகிருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் கடந்த 10 ஆண்டுகளாக, இந்த பள்ளிவசாசலில் 5 வேளையும் தொழுகையிலும் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளிவாசல் அனுமதியின்றி செயல்படுவதாகவும் அதை மூட வேண்டியும் நீதிமன்றத்தில் சில மதவாத சக்திகளால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நீதிமன்ற வழங்கிய உத்தரவை எதிர்த்து மேல்முறையீட செய்யப்பட்டுள்ள நிலையில், அவசரகதியில் இப்பள்ளிவாசலை பூட்டி சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் இன்று 30/06/2022 காவல்துறை, வருவாய் துறை, மாநகராட்சி. ஒத்துழைப்புடன் முயற்சி மேற்கொண்ட போது. இதனை தடுக்கும் விதமாக இஸ்லாமிய பெருமக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் காவல்துறையினர் கைது செய்யுள்ளதை இந்திய தேசிய லீக் சார்பில் வன்மையாக கண்டிக்கும் அதேநேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் எந்த வழக்குகளையும் காவல்துறையினர் பதிவு செய்ய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்க கூடாது என இந்திய தேசிய லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தில் இந்து – இஸ்லாமிய சகோதரர்கள் தொப்புள் கொடி உறவுகளாக பழகி வரும் நிலையில், இரு சமுதாயத்திற்கும் இடையே மத மோதலை ஏற்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளின் சதி வலையில் திமுக அரசு சிக்கிவிடக் கூடாது. இஸ்லாமிய பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று திருப்பூர் வேலம்பாளையம் பள்ளிவாசலுக்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காலதாழ்த்தாமல் உத்தரவிட வேண்டுமென இந்திய தேசிய லீக் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
English Summary
INL Tamilnadu say about tripur issue