சகோதரத்துவம் தழைத்தோங்கிட உறுதி ஏற்போம் : இந்திய தேசிய லீக் கட்சியின் புத்தாண்டு வாழ்த்து.!
INL Tamilnadu wish Tamil NewYear
மதவாதத்தை முறியடித்து சகோதரத்துவம் தழைத்தோங்கிட இந்நாளில் உறுதி ஏற்போம் என்று, இந்திய தேசிய லீக் கட்சி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒரு புத்தாண்டின் விடியல் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது.
தமிழ் புத்தாண்டு சித்திரை 1, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கட்டும்.
தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்ற இந்த நேரத்தில் உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோயை வென்றிடவும் இப்புத்தாண்டு நமக்கு வழிவகுக்கட்டும்.
இந்தப் புத்தாண்டிலாவது சாதி, மத, இன, மொழி வேறுபாடற்ற சமுதாயம் உருவாக்கிட வேண்டும். தமிழ் புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் புத்தாண்டில் மதவாதத்தை முறியடித்து சகோதர நேசம் மேலோங்கி நின்றிடட்டும், நம் அனைவருக்கும் புதுவாழ்வும், புத்தெழுச்சியும், புது வளர்ச்சியும் வழங்கிடும் ஆண்டாக இவ்வாண்டு அமைந்திடட்டும் என வாழ்த்தி அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறேன்"
இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முனிருத்தீன் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
English Summary
INL Tamilnadu wish Tamil NewYear