துறைகளின் மூலமே அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.. அதிமுக வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


அரசின் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏக்கள் மூலம் இல்லாமல் துறைகளின் மூலமே வழங்க வேண்டும் என  புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளருக்கு பேட்டியளித்த அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: இந்தியா என்பது பல்வேறு புனிதமான மதங்களை உள்ளடக்கிய மக்கள் வாழும் மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். அனைத்து தரப்பு மக்களும் அனைத்த மதங்களை மதித்தும் எந்தவொரு மதத்தையும் புன்படுத்தாமல்  இருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். அதேபோல் மத நல்லிணக்கனத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மத தலைவர்களின் தலையாய கடமையாகும். சில நேரங்களில் மத நல்லிணக்கத்திற்கு ஊரு விலைவிக்கின்ற விதத்தில் அற்ப அரசியல் ஆதாயத்திற்காக குறிப்பிட்ட சில மதங்களை கேவலப்படுத்தி பேசும் அற்ப அரசியல் வாதிகளை கண்டிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். 

தமிழகத்தில் திமுகவை சேர்ந்த அமைச்சர் பதவியில் உள்ள திரு.பொன்முடி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து மத கடவுள்களின் சைவ, வைணவ புனித சின்னங்களை விபச்சாரிகளுடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு ஆணவத்தின் உச்சமாகும். மேலும் மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் செயலாகும்.

சாதாரணமாக நம் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு மதரீதியில் ஏதாவது தொல்லைகள் ஏற்படும் போது அரசியலுக்கு அப்பாற்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக பல இயக்க தலைவர்களும், மத தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பர். இந்துமத கடவுள்களையும், இந்து மத பெண்களையும் வாய் கூசும் அளவிற்கு விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் திரு.பொன்முடி அவர்களின் பேச்சுக்கு இதுவரை சிறுபான்மை மதத்தை சேர்ந்த தலைவர்கள் பெரிய அளவில் யாரும் கண்டனம் தெரிவிக்காமல் உள்ளனர். பிற மதத்தில் இருந்து கண்டனம் தெரிவிக்காதது திமுகவை சேர்ந்த அமைச்சர் பொன்முடியின் கேடுகெட்ட அநாகரீகமான செயலை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துவிடும். அதே போன்று இந்து கடவுளை விமர்சனம் செய்தவர் திமுகவை சேர்ந்த அமைச்சர் என்பதால் இந்து மதத்தை சேர்ந்து பல்வேறு மத குகுருமார்களும், மடாதிபதிகளும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது மதச்சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கையான அட்டவணை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் முழு கல்வி உதவித்தொகை போன்று மீனவ சமுதாய மாணவ பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் அவர்களுக்கு அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுச்சேரி மாநில்தில் சமூக நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, மீன்வளத்துறை, அட்டவணை இனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நலத்திட்ட உதவிகளை பெற தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும் போது அந்த துறையில் உள்ள அதிகாரிகள் அதற்கான ஆணை கடிதம் மற்றும் கார்டுகளை மொத்தமாக சில சட்டமன்ற உறுப்பினர்களிடமே கொடுத்து விடுகின்றனர். இவ்வாறு துறைகளிடம் இருந்து பெறக்கூடிய நலத்திட்ட உதவி பெறுவதற்கான ஆணை கடிதத்தை தங்களது கட்சியை சேர்ந்த அலுவலகத்திற்கு பயனாளிகளை வரவழைத்து வழங்கப்படுகிறது.

பொதுவாக அரசு சார்ந்த எந்த உதவிகளுக்கான ஆணை கடிதமும் அரசு அதிகாரிகளின் கைவசம் தான் இருக்க வேண்டும். தற்போது இதற்கு மாறாக சட்டமன்ற உறுப்பினர்கள் கையில் இருப்பதால் பயனாளிகளுக்கு அந்த ஆணை கடிதத்தை கொடுக்கும் போது மாற்று கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் பல விதங்களிலும் அவமானப்படுத்தப்பட்டு கூனி குறுகி இந்த அனுமதி கடிதத்தை பெறக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து தலைமை செயலாளர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை அரசு துறைகளின் மூலமே வழங்குவதற்கான ஆணையை சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு உணர்த்த வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கைவிடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Government welfare assistance should be provided through departments. AIADMK insists


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->