அதிமுக தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டலம் சார்பில் வாட்ஸ் அப் சேனல் துவக்கம்!
AIADMK's Vellore Zone Launches WhatsApp Channel
ராணிப்பேட்டை மாவட்டம் ,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் மண்டல சார்பில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு வாட்ஸ் அப் சேனல் துவங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வேலூர் மண்டலம் மற்றும் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக கட்சி தொண்டர்கள் கட்சியில் நடைபெறும் அனைத்து தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் சேனல் துவக்க நிகழ்வு நடைபெற்றது.
அதிமுக வேலூர் மண்டல இணைச்செயலாளர் அக்ரி பாலாஜி முன்னிலையில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கு.எழிலரசன் ஏற்பாட்டில் இந்த வாட்ஸ் அப் சேனல் துவக்க நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு whatsapp சேனலை துவக்கி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தொலைபேசியில் ஸ்கேன் செய்து வாட்ஸ் அப் சேனலில் இணைத்து விழாவினை தொடங்கி வைத்து நிகழ்வை சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VKR.சீனிவாசன் ,முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட துணைச்செயலாளர் வேதகிரி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பூண்டி பிரகாஷ், வாணியம்பாடி ராகவன், ஜிம் சங்கர், சாரதி (எ) ஜெயச்சந்திரன், சித்தார்த், படியப்பாக்கம் மூர்த்தி, மாவட்ட பிற அணி நிர்வாகிகள் புல்லட் மூர்த்தி, விஜய்ஆனந்த், உமர்பாரூக், அஜிஸ், சுரேஷ் ,மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் செல்வராஜ், கண்ணன், மணிகண்டன், மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
English Summary
AIADMK's Vellore Zone Launches WhatsApp Channel