ராகுலை விட மோடி பரவாயில்லை.. ஆந்திர முதல்வரின் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


ராகுல் காந்தியுடன் ஒப்பிடும் போது பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் ஆந்திர மாநிலத்திற்கான சட்டமன்ற பொது தேர்தலும் நடைபெற உள்ளதால் அம்மாநில அரசியல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய கட்சியான பாஜக ஆந்திராவில் தற்போது வளர்ந்த வரும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஆர் ஷர்மிளா நியமிக்கப்பட்ட பிறகு தனது சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக தீவிரமான அரசியலை முன்னெடுத்து வருகிறார்.

இதற்கிடையே தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் நெறியாளர் ராகுல் காந்தி பிரதமராகலாம் என்று நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெகன்மோகன் ரெட்டி "ராகுல் காந்தியை நான் மோசமாகப் பார்த்திருக்கிறேன்.

ராகுல் யாரையும் விட சிறந்தவர் என்று என்னால் கூற முடியாது. சிறுபான்மையினர் தொடர்பான சில அம்சங்களைத் தவிர, ராகுல் காந்தியை விட பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர்" என ராகுலை விமர்சனம் செய்து மோடியை புகழ்ந்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த நிலைப்பாடு பாஜகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagan Mohan said Modi better than Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->