முன்னாள் எம்எல்ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை: பெரும் அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தலைவருமான ஃபக்கீர் முகமது கான், ஸ்ரீநகரில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1996ல், குரேஸ் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற முகமது கான், 2020-இல் பாஜகவில் இணைந்தார்.

2024 சட்டப்பேரவை தேர்தலில், குரேஸ் தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிட்ட முகமது கான், தேசிய மாநாட்டு வேட்பாளர் நசீர் அகமது கான் குரேசியால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

தற்போது  62 வயதான முகமது கான், துளசிபாக் பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் தங்கியிருந்தார். தொழுகை நடத்தச் செல்லும் முன்னர், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அலமாரியில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து, காரணங்களை ஆராய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது மரணத்துக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jammu kasmir Ex MLA Gun Suicide


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->