சென்னை மக்களுக்கு ஷாக்!!! இந்த கோடை காலம் மிக உக்கிரமாக இருக்கும்..!!!- சென்னை வானிலை ஆய்வு மையம்
This summer will be very intense Chennai Meteorological Department
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் முந்தைய ஆண்டை விட அதிகளவில் வாட்டி வதக்கும்.பொதுவாகவே கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்:
அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2° முதல் 3° செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34° -35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால் மக்களை சோகத்தையும் அதிர்ச்சியையும் அடையச் செய்துள்ளது.
English Summary
This summer will be very intense Chennai Meteorological Department