பசுந்தோல் போர்த்திய சீமான்; பாஜகவிடம் அடமானம் வைக்கப்பட்ட அதிமுக.! - ஜவாஹிருல்லா பரபரப்பு குற்றச்சாட்டு..!!
Jawahirullah criticizes AIADMK BJP and Seeman
திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய தொழிலாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "மத்திய பாஜக அரசு 44 வகையான சட்டங்களை நீக்கியும், பெரும் தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக 4 சட்டங்களை கொண்டு வந்திருப்பதை மனிதநேய தொழிலாளர் சங்கம் எதிர்க்கிறது.
தமிழகத்தில் வீட்டு பணியாளருக்கு சமூக பணி, பாதுகாப்பு ஊதிய நிர்ணயம், வார விடுமுறை ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றும். பாஜகவிடம் தன்னை அடமானம் வைத்துள்ள அதிமுக தற்பொழுது குழப்ப நிலையில் இருக்கிறது.
நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய திராவிட கொள்கைகளுக்கு எதிராக மக்களின் வாக்குகளை பிரிக்க பசுந்தோள் போர்த்திய நபராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்து மர்மமான முறையில் செயல்பட்டு வருவதன் காரணமாக தமிழக அரசு அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என செய்தியாளர் சந்திப்பில் ஜவாஹிருல்லா பேசியுள்ளார்.
English Summary
Jawahirullah criticizes AIADMK BJP and Seeman