"இந்த விஷயத்துல திமுக அரசுக்கு தான் ஆதரவு." ஜெயக்குமார் திட்டவட்டம்.!  - Seithipunal
Seithipunal


இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருந்த நிலையில், நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இன்று நடந்த  சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை.

அவரது ஆதரவாளர்களும் இன்று சட்டப்பேரவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில், இன்று எம்ஜிஆர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய போது அவரிடம் மத்திய அரசு மாநில அரசின் முடிவுகளில் தலையிடுவதாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஜெயக்குமார், "மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதை எப்பொழுதும் ஏற்க முடியாது. இதை அதிமுக கண்டிப்பாக எதிர்க்கும். 

நூறு மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்தால் கூட அவர்களால் தமிழகத்திற்கு நன்மை ஏற்பட்டால் சரி. ஆனால், மாநில அரசின் உரிமைகளில் அவர்கள் தலையிட்டால் அதிமுக கண்டிப்பாக எதிர்க்கும்." என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakkumar about State Govt Rights


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->