உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துவிட்டது - முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற ஐந்தாம் தேதி அவரின் நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சார்பாக நினைவஞ்சலி நடத்த அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடிதம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை ஜெயக்குமார் தெரிவித்தாவது, "இந்த விடியாத திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் மருத்துவத்துறை முழுமையாக கவனிப்பாரற்று, கேட்பாரற்று நிர்வாக திறமை இல்லாமல் சீர்கெட்டு பொய் உள்ளது.

ஒட்டுமொத்தமான இந்த விடியாத அரசின் அமைச்சராக இருக்கும் மா சுப்பிரமணியன், தினத்தோறும் பத்திரிகையாளரை சந்திக்கின்ற வழக்கமும், மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களோடு நடைபணம் செய்வதும் தான் அவருடைய வழக்கமும், வாடிக்கையாகவும் இருக்கிறது.

அரசாங்க மருத்துவமனையை ஏழை எளிய மக்கள் தான் நாடி வருவார்கள். மாணவி பிரியா மூட்டு அறுவை சிகிச்சைக்காக வந்தவர். இது ஒரு சாதாரண அறுவை சிகிச்சை. உயிர் போகும் அளவுக்கான சிகிச்சை கிடையாது. ஆனால் இவர்கள் காலை எடுத்தார்கள், பின் உயிரை எடுத்து விட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசாங்க மருத்துவமனை மீது எளிய மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இது மட்டுமா தொடர்ச்சியாக மதுரை அரசாங்க மருத்துவமனையில் ஒரு வயது குழந்தைக்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக, பிறப்புறுப்பில் சிகிச்சை சிகிச்சை நடத்தி உள்ளார்கள்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களை ஆன குழந்தை இறந்து போய் உள்ளது. தவறான மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஒரு அனஸ்தீசியா மயக்க மருந்து கொடுத்து, அதன் அடிப்படையில் ஒரு சிகிச்சை அளிப்பது காலகாலமாக நடக்கக்கூடிய ஒரு விவகாரம். அதில் கூட கவன குறைவு காரணமாக ஒரு குழந்தை ஒன்று இறந்து இருக்கிறது.

தொடர்ச்சியாக இப்படியான நிகழ்வுகள் நடப்பதை அறிந்து, சென்னை உயர்நீதிமன்றமும் தங்களுடைய வேதனையை தெரிவித்துள்ளது. பொதுவாகவே ஏழை ஏழை மக்களுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை. மருந்துகள் கையிருப்பு இல்லாமல் இருக்கிறது.

அரசு மருத்துவமனைகளின் அவலங்கள் குறித்து இந்த விடியா அரசு கண்டு கொள்வதில்லை. முதலமைச்சரும் கண்டு கொள்வதில்லை. மருத்துவத்துறை அமைச்சரும் கண்டு கொள்வதில்லை" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar say about DMK Govt hospital issue 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->