மோடி பதவியேற்பு விழா : 3 கிலோ வெள்ளியில் தாமரை பரிசளித்த நகை வியாபாரி! - Seithipunal
Seithipunal


18வது மக்களவைத் தேர்தல் முடிந்து மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இன்று மாலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முன்னிலையில் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தரவுள்ளனர்.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதற்காகவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஒரு சிறப்பான பரிசினை வழங்க வேண்டும் என்று தான் நினைத்ததாக பாஜகவின் இளைஞர் பிரிவு பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா செய்தி தொடர்பாளரான ரிங்கு சவுகான் கூறினார்.

இவர் ஜம்முவில் புறநகரில் உள்ள முத்தி கிராமத்தை சேர்ந்த நகை வியாபாரி ஆவார். இது குறித்து அவர் கூறுகையில், "நம் பிரதமருக்கு இந்த சிறப்பான பரிசினை நான் தனித்துவமாக தனிப்பட்ட முறையில் தயாரித்துள்ளேன். இந்த வெள்ளி தாமரை மலரை வடிவமைக்க எனக்கு 20 நாட்கள் ஆனது.

பிரதமர் மோடி எனக்கு கடவுள் போன்றவர். இந்த பரிசினை நான் வெள்ளியில் வடிவைத்துள்ளேன். என்னுடைய இததனை வருட அனுபவம் மொத்தத்தையும் இந்த பரிசை வடிவமைப்பதில் காட்டியுள்ளேன். நிச்சயம் அவருக்கு இந்த பரிசு பிடிக்கும். இதை அவரை நேரில் சந்தித்து வழங்க காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jewellery Shop Owner Gifted 3 Kg Silver Lotus to PM Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->