முதலமைச்சர் பதவியை இழக்கிறார் ஹேமந்த்சோரன் - தேர்தல் ஆணையம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
Jharkhand cm HemantSoren MLA mine case ec order
சுரங்க முறைகேடு வழக்கில் ஹேமந்த்சோரனை, எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஜார்கண்ட் எம்.எல்.ஏ.,வாக இருந்த முதலமைச்சர் ஹேமந்த்சோரனை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனை அடுத்து ஜேஎம்எம் கட்சி தனது அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் ராஞ்சிக்கு அவசர கூட்டத்திற்கு அழைத்துள்ளது.
முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சுரங்க குத்தகைக்கு தன்னை நீட்டித்துக் கொண்டதாக பாஜக குற்றம் சாட்டியது மேலும் அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரியது.
ஹேமந்த் சோரன் மீதான இந்த சுரங்க குத்தகை வழக்கின் விசாரணை கடந்த திங்கள்கிழமை தேர்தல் ஆணையத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில், இன்று ஜார்கண்ட் மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) நிஷிகாந்த் துபே, தேர்தல் ஆணையத்தின் கடிதம் ஆளுநருக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், சுரங்க முறைகேடு வழக்கில் ஹேமந்த்சோரனை, எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய அம்மாநில ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Jharkhand cm HemantSoren MLA mine case ec order