கோவையில் 3000 பேருக்கு வேலை ரெடி - அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், விளாங்குறிச்சி அருகே டைட்டில் பார்க் வளாகத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் ரூ.114.16 கோடி மதிப்பில் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதன்  பணிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் உள்ள மிகப்பெரிய துறை இந்த புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் என்றும், பல்வேறு காரணங்களால் கட்டிடம் கட்டுவதில் தாமதமாகியதாக தெரிவித்த அவர், உரிய விதிமுறைகள், சான்றிதழ்கள் பெற்று இந்த கட்டிடத்தை திறக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த கட்டிடம்  மூலம் 3,250-க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும் என்றும், ஒரு சில நிறுவனங்கள் இடத்தை முழுமையாக கேட்கின்றன. ஆனால் அது நியாயமாக இருக்காது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருப்பதாகவும், வடசென்னை, ஓசூர், கோவை போன்ற இடங்களில் ஹைடெக் சிட்டி அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. விவகாரத்தில் மத்திய அரசின் மனப்பான்மை சரியாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், ஜி.எஸ்.டியில் உள்ள தவறுகளை வேகமாக சரி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jobs ready for 3000 people in Coimbatore minister palanivel thiagarajan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->