அரியலூர் | தமிழக போலீசின் கோர முகம் - அன்புமணி இராமதாஸை தொடர்ந்து களமிறங்கிய சீமான், அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


அரியலூர் : காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்துக்கு காரணமான காவல்துறையினரின் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாமக தலைவர் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், பாமகவின் தொடர் போராட்டம், அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் போலீசார் ஏதோ தவறு செய்து இருப்பதை தமிழக மக்கள் உணர தொடங்கியுள்ளனர்.

உண்மையை கண்டறிய பாமக வழக்கறிஞர் பாலு தலைமையிலான குழு தற்போது விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மற்ற அரசியல் கட்சிகளும் விவசாயி செம்புலிங்கம் மரணத்துக்கு நீதி கேட்க களமிறங்கியுள்ளனர்.

நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்த நிலையில், இன்று அப்ஜக மணிலா தலைவர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்துக்கு நீதி கேட்டு, இன்று அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிவிப்பில், "காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையைச் சேர்ந்த விவசாயியும், தமிழக பாஜகவின் தொண்டருமான அண்ணன் செம்புலிங்கம் உயிரிழந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

இந்த குற்றச் சம்பவத்திற்கு காரணமான காவல்துறையினரின் மேல் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று (டிச.11) அரியலூர் மாவட்டத்தில், உயிரிழந்த செம்புலிங்கம் மரணத்துக்கு நீதி கேட்டு, திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்" என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justice for Sembulingam PMK NTK BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->