எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு மகிழ்ச்சி செய்தி! முக்கிய புள்ளி குறித்து பரபரப்பு செய்தி! - Seithipunal
Seithipunal


ஓ பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக, கிட்டத்தட்ட வலது கரம் என்று சொல்லும் அளவுக்கு பேசப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி எம்எல்ஏ, தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் கேபி முனுசாமி பங்கேற்கவில்லை. 

இதன் காரணமாக கேபி முனுசாமி ஓ பன்னீர்செல்வம் பக்கம் செல்ல உள்ளதாக பல்வேறு செய்தி ஊடகங்களும் இட்டுக்கட்டி செய்திகள் வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தின் பிரபல நாளிதழ் ஒன்று கேபி முனுசாமி இடம் நேரடியாக தொடர்பு கொண்டு இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், கே பி முனுசாமி தெரிவித்ததாக அந்த செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், வைரஸ் காய்ச்சல் காரணமாக கேபி முனுசாமி வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும், தன்னை பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் வேதனை தெரிவித்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எப்போது பார்த்தாலும் அணி மாறிக்கொண்டிருக்கும் அளவுக்கு, நான் தரம் தாழ்ந்து போகவில்லை என்றும், ஓபிஎஸ் அணிக்கு நான் செல்ல மாட்டேன் என்றும், திட்டவட்டமாக கேபி முனுசாமி மறுத்ததாக அந்த நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K P Munusami Explain rammers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->