தமிழகம் ஒரு ஆன்மீக பூமி., அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி.!
K T RAJENDRA BALAJI election campaign
அதிமுக அமைச்சர்களில் தொகுதியை மாற்றி போற்றிடும் ஒரே அமைச்சர், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒருவர் மட்டுமே.
கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்கள், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இதற்காக ராஜபாளையம் தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவிக்கையில்,
"இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து சமூக மக்களுக்கும் நான் உறுதுணையாக இருப்பேன். தமிழகம் ஒரு ஆன்மீக பூமி என்பதை நிலைநிறுத்தும் வகையில் நான் செயல்படுவேன்.
அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்ட தான் சட்டம் தான், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன்.

அதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, என்னை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் படி உங்களை என் இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
நான் வெற்றி பெற்ற பின் அனைத்து சமூக மக்களுக்கும் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
English Summary
K T RAJENDRA BALAJI election campaign