இதுவரை பார்த்தது திராவிட மாடலின் பார்ட் 1 தான்...! 2.0 லோடிங்...!!! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Part 1 Dravidian Model done 2point0 loading CM MK Stalin
சென்னையில் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,'காவல் மற்றும் தீயணைப்புத்துறை' மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாடினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு" எனத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை தொடர்பான அறிவிப்பு:
இதைத்தொடர்ந்து காவல்துறை தொடர்பான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதன் விவரங்கள்,"ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும். சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கு காவலர் நாளில் விருது வழங்கப்படும். 'காலனி' என்கிற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும் தீண்டாமைக்கான குறியீடாகவும் மாறி இருப்பதால், இனி இந்த சொல் அரசு அலுவலகங்களில் இருந்தும் பொதுபுழக்கத்திலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவலர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்யப்படும்.ஊட்டி, தர்மபுரியில் காவலர் குடியிருப்புகள் அமைக்கப்படும்.விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தீயணைப்பு மண்டலம் உருவாக்கப்படும்.௫-வது காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.கோவையில் ரூ.5 கோடி செலவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்கப்படும்.காவல்துறையின் செய்தி மற்றும் ஊடகத்துறையை நிர்வகிக்கும் பொருட்டு புதிதாக ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்படும்.
சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட, மாநகரங்களிலும் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும்.சென்னை ஆயுதப்படையில்2 புதிய பணியிடங்களும், 250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும்.காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்களும் 50 நடமாடும் தடயவியல் வாகனமும் வழங்கப்படும்.
இதுவரை பார்த்தது திராவிட மாடலின் 'பார்ட்-1 தான்" "2026- வெர்ஷன் (Version) 2.0 லோடிங் (loading). அதில் இன்னும் பல சாதனைகளை படைக்கப் போகிறோம். தமிழ்நாடு வரலாறு படைக்கும். மாநில சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும்" எனத் தெரிவித்துள்ளது.
English Summary
Part 1 Dravidian Model done 2point0 loading CM MK Stalin