'மேலே பாம்பு...கீழே நரிகள்'...! என 'ஒரு பக்கம் மத்திய அரசு... ஒரு பக்கம் கவர்னர்'...! என நிதி தடையை தாண்டி சாதனை...!!! - முதலமைச்சர் - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,"இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும்.

ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் தெரிவிப்பார். ஆனால் கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என தெரிவித்திருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை.

மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தான் உள்ளது.இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

கடந்த அரசின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. கடந்த ஆட்சியின் இருளை போக்கி தலைநிமிர்ந்து நடக்கிறது தமிழ்நாடு அரசு. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி இந்தியாவில் எந்த மாநிலமும் காணாதது தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.3.58 லட்சம்; தேசிய சராசரி ரூ.2.06 லட்சம்தான்.

மேலே பாம்பு.. கீழே நரிகள்.. குதித்தால் அகழி.. ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் மத்திய அரசு மறு பக்கம் கவர்னர்.. நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம். இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை" எனத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

one side central government on other side governor CM achievement overcoming financial hurdle


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->