"முதல்ல அவருக்கு கொள்கை இருக்கா..? சினிமால நடிச்சாலே அரசியல்ல ஜெயிச்சுட முடியாது" - விஜய் குறித்து கி. வீரமணி கருத்து..!! - Seithipunal
Seithipunal



தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் முதல் நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் இன்று கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியார்களிடம் விஜயின் அரசியல் குறித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நீட் தேர்வு குறித்து யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அந்த வகையில் நடிகர் விஜய்க்கும் அரசியலுக்கு வரவும்,  நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவிக்கவும் அனைத்து உரிமையும் உண்டு. 

விஜய் அரசியலுக்கு வருவதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் சினிமாவில் நடித்து நல்ல நடிகராக இருந்தாலே அரசியலில் ஜெயித்து விட முடியாது. எம். ஜி. ஆர் அரசியலில் ஜெயித்தார் என்றால், அவர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்தார். அதனால் அரசியலில் ஜெயித்தார். நடிகராக இருந்ததால் மட்டுமே எம். ஜி. ஆர் ஜெயிக்கவில்லை என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

எம். ஜி. ஆருக்குப் பிறகு வந்த எந்த நடிகரும் அரசியலில் ஜெயிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கட்சி ஆரம்பிக்கும் போதே கொள்கையையும் அறிவிக்க வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால் இப்போது கட்சி ஆரம்பிக்கிறேன். பிறகு கொள்கையை அறிவிக்கிறேன் என்பது மிகவும் முரண்பாடாக உள்ளது. மற்றபடி விஜய் மட்டுமல்ல நல்ல கருத்தை யார் கூறினாலும் நாம்  வரவேற்போம்" என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

K Veeramani Speaks About TVK Leader Vijay


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->