டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலா மற்றும் டி டி தினகரன் மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கு மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றிய தலைமைக்கு அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

அதிமுகவில் சசிகலாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.  இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனுடைய சசிகலாவிற்கு மாவட்ட வாரியாக ஆதரவு பெருகி வருகிறது. இன்று ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் சசிகலாவை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது. 

இந்நிலையில், அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைப்பது குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பொதுக்குழு கூடி தான் முடிவு எடுக்க முடியுமே தவிர, பொது வெளியில் எதையும் கூறமுடியாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadambur raju press about sasikala and ttv dinakaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->