ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவை நடத்துவதற்கு வாய்ப்பில்லை - அதிமுக கடம்பூர் ராஜு.! - Seithipunal
Seithipunal


அரசியல் கட்சி நிலைப்பாட்டை நீதிமன்றம் ஒன்றும் முடிவு செய்துவிட முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக நடத்திய பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை ஜூன் 23ம் தேதி நிலைமையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், பொதுக்குழு கூட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கடம்பூர் ராஜூ, "அரசியல் கட்சி நிலைபாட்டை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. அரசியல் கட்சி நிலைப்பாட்டை நீதிமன்றம் ஒன்று முடிவு செய்துவிட முடியாது.

இரட்டைத் தலைமை வேண்டாம் என்பதற்காக தான் பொதுக்குழுவை நடத்தினோம். பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்களிடம் தான் உள்ளனர். எங்களின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவை நடத்துவதற்கு வாய்ப்பில்லை. நீதிமன்றம் வந்து கட்சி வழி நடத்த முடியாது. சட்ட வல்லுநர்களோடு கலந்து மேல்முறையீடு செய்வோம்"எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kadambur Raju speech about ADMK judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->