இதை மட்டும் சொல்லட்டும் அண்ணாமலை - நான் பாஜகவில் இணைகிறேன் - அதிரடி காட்டும் கனிமொழி! - Seithipunal
Seithipunal


சமீப காலமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், திமுக எம். பி. கனிமொழிக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தோல்வியை தழுவினாலும் கோவையில் பதிவான வாக்கு சதவீதத்தில் இரண்டாமிடத்தில் உள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியில், "திமுகவின் வாக்கு சதவீதத்தை 33.52 சதவீதத்தில் இருந்து 26.93 சதவீதமாக குறைத்ததில் பாஜகவிற்கு பெரும்பங்கு உண்டு. 

தகுதியில்லாத ஒருவர் பாஜக தலைவராக இருக்கிறார் என்றும், மேலும் நான் பதவி விலக வேண்டும் என்றும் கனிமொழி கூறியிருக்கிறார். ஒரு வேளை கனிமொழி பாஜகவிற்கு வந்தால் நான் அவர் கூறிய கருத்தை பரிசீலிக்கலாம்" என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கனிமொழி, " நான் எதற்கு பாஜகவை வளர்க்க வேண்டும். அது என் வேலையில்லை. நான் பாஜகவிற்கு வர வேண்டும் என்று அண்ணாமலை விரும்பினால், 'பெரியார் வாழ்க' என்று அண்ணாமலை கூற வேண்டும். அப்படி அவர் கூறினால் நான் உடனே பாஜகவில் இணைகிறேன்" என்று கனிமொழி எம். பி. அதிரடியாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi MP Replied to TN BJP Leader Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->