நாட்டிலேயே ஏழை முதல்வர் இவரா?! நம்ம CM ஸ்டாலின் சொத்து இவ்வளவு தானா! அப்போ பணக்கார முதல்வர் யார் தெரியுமா?
NEW Indias Richest CM Andhra Pradesh ChandrababuNaidu Tamilnadu CM Stalin West Bengal MamataBanerjee
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு, NEW என்ற அமைப்பு இணைந்து பணக்கார, ஏழை முதல்வர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.931 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாமிடத்தில் ரூ.332 கோடி சொத்து மதிப்புடன் அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு,
மூன்றாம் இடத்தில் ரூ.51 கோடி சொத்து மதிப்புடன் கா்நாடக முதல்வா் சித்தராமையா உள்ளார்.
இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.8 கோடி சொத்து மதிப்புடன் 14வது இடத்தில் உள்ளார்.
ஏழை முதல்வர் என்ற பெயரோடு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரூ.15 லட்சம் சொத்து மதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக ரூ.55 லட்சம் சொத்து மதிப்புடன் ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லாவும்,
ரூ.1 கோடி சொத்து மதிப்புடன் கேரள முதல்வா் பினராயி விஜயனும் உள்ளனா்.
English Summary
NEW Indias Richest CM Andhra Pradesh ChandrababuNaidu Tamilnadu CM Stalin West Bengal MamataBanerjee