பொங்கல் பரிசுத் தொகுப்பு - 2000 வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.!
gk vaasan say 2000 money provide to pongal gift
ஒவ்வொரு வருடமும் பெண்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசுத்த தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அதில் பணத் தொகை இடம் பெறவில்லை.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், "தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு தரமான பொருட்களை ரூ. 2,000 பணத்துடன் முன்னதாகவே தங்கு தடையின்றி வழங்கவும், விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம் பெறவில்லை. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். காரணம் வடகிழக்குப் பருவமழையால் விவசாயிகள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக விவசாயப் பயிர்கள் வீணாகி, பொது மக்கள் உடமைகளை இழந்து மிகுந்த பொருளாதார சிரமத்தில் உள்ளனர். தமிழக கூட்டுறவுத்துறை சார்பில், பொது மக்கள் அனைவரும் பயன்படும் வகையில், பொங்கல் விழாவை முன்னிட்டு, மூன்று வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. பச்சரிசி, வெல்லம், கரும்பு, வேட்டி, சேலை ஆகியவற்றை தரமாக கொள்முதல் செய்து வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
gk vaasan say 2000 money provide to pongal gift