#திடீர்திருப்பம் | கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் மரபணு சோதனை - சிபிசிஐடி போலீசார் பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில், மாணவியின் பெற்றோர்கள் மரபணு பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மாணவியின் பெற்றோர் குறித்து யூ-டியூபர் ஒருவர் குற்றச்சாட்டை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, அந்த யூ-டியூபர் குறித்து காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் ஸ்ரீமதியின் அளித்துள்ளனர். அதில், ஸ்ரீமதியின் தந்தை குறித்து தவறான தகவல்களை யூ-டியூபர் வெளியிட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி போலீசார், ஸ்ரீமதியும் பெற்றோர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், ஸ்ரீநிதி பள்ளி விடுதியில் பயன்படுத்திய செல்போனை தங்களிடம் தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மரபணு பரிசோதனைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் சிபிசிஐடி போலீசார் முன்வைத்தனர். இதனையடுத்து நீதிபதி அவர்கள், மாணவி செல்போன் பயன்படுத்தியிருந்தால் அதனை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

ஸ்ரீமதி மரண வழக்கில், மரபணு பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முயற்சி செய்து இருப்பதும், அதற்கு ஸ்ரீமதியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்திருப்பதும் இன்றைய வழக்கு விசாரணை மூலம் அம்பலம் ஆகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaniyamur Sri Mathi Death Case Some info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->