தமிழகம் | போலீசை கேட்காமல் ஒரு பிள்ளையார் சிலையும் வைக்க கூடாது.!
kannamangalam vinayagar sadurthi
வேலூர் : கண்ணமங்கலம், சந்தவாசல் பகுதியில் வருகின்ற 31-ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் குறித்து கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணியினர், விநாயகர் சிலைகள் வைப்பவர்கள் மற்றும் விநாயகர் சிலைகள் செய்பவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு காவல்துறையினருக்கு தெரியாமல் சிலைகள் வைக்கக்கூடாது என்றும் விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும் என்றும் ஆரணி துணை காவல் சூப்பிரண்டு அதிகாரி ரவிச்சந்திரன் ஆலோசனை வழங்கினார்.
மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கிய அவர் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் காவல் ஆய்வாளர், துணை காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.
English Summary
kannamangalam vinayagar sadurthi