இஸ்லாமிய ஹிஜாப் அணியும் 58 மாணவிகள் இடைநீக்கம் செய்து நோட்டிஸ்.!
karnataka 58 hijap student suspend
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது எங்களது உரிமை என்று இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களுக்குள் சாதி-மதம், ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாத தெரியக்கூடாது என்பதற்காக சீருடை கொண்டுவரப்பட்டது. ஆனால், பெண்ணுரிமை பேசியவர்களும், சாதி, மதம் பள்ளி-கல்லூரிகளில் வரக்கூடாது என்றவர்களும் இப்போது மாற்றி பேசி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தை போல ஆந்திர மாநிலத்தில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 2 மாணவிகளை, கல்லூரி வளாகத்துக்குள் அனுமதிக்காமல், கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளங்களுடன் மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்க தடை விதித்து ஒரு உத்தரவையும் பிறப்பித்து உள்ளது.
இருப்பினும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எங்களுடைய உரிமை, நாங்கள் அணிந்து தான் வருவோம் என்று பிடிவாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹிஜாப் அணிந்துதான் கல்லூரிக்கு வருவோம் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த அரசு கல்லூரி மாணவர்கள் 58 பேரை கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர் உயர்நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வரும்வரை கல்லூரிக்கு வருவதில்லை என்று இஸ்லாமிய ஹிஜாப் அணியும் மாணவிகளும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்
English Summary
karnataka 58 hijap student suspend