கர்நாடகாவில் 14 அமைச்சர்கள் படுதோல்வி! டெபாசிட் காலியான சம்பவம்! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலின் வெற்றி முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சி 123 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 58 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மதசார்பற்ற ஜனதாதளம் 19 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 123 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி உறுதியாகி உள்ளது.

மேலும் இந்த தேர்தலில் பாஜக அமைச்சர்கள் 14 பேர் தோல்வியடைந்துள்ளனர். அதில், கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் டெபாசிட் இழந்துள்ளார். 

முத்தோள் தொகுதியில் போட்டியிட்ட பாசனத்துறை அமைச்சர் கோவிந்த கார்ஜோள் தோல்வி,

பெல்லாரி ஊரகம் தொகுதியில் போட்டியிட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.ஸ்ரீ.ராமுலு தோல்வி, 

பீளகி தொகுதி தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி தோல்வி!

வருணா தொகுதி, சாம்ராஜ் நகர் இரு தொகுதிகளிலும் வீட்டு வசதி துறை அமைச்சர்வி சோமண்ணா தோல்வி!

சிக்கப்பள்ளாபுரா நகர் தொகுதியில் போட்டியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் தோல்வி!

எல்புர்கா தொகுதியில் போட்டியிட்ட சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் தோல்வி!

ஒசகோட்டை தொகுதியில் போட்டியிட்ட சிறு குறு தொழில் வளத்துறை அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் தோல்வி!

கிருஷ்ணராஜ் பேட் தொகுதியில் போட்டியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி.நாராயண கவுடா தோல்வி!

ஹிரேகேரு தொகுதியில் போட்டியிட்ட விவசாயத் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தோல்வி!

சிக்கநாயகனஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மாதுசாமி தோல்வி!

சிர்சி தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி தோல்வி!

திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட கல்வித்துறை அமைச்சர்பி.சி.நாகேஷ்- தோல்வி!

நாவல்குண்ட் தொகுதியில் போட்டியிட்ட துணி நூல் துறை அமைச்சர் சங்கர் மூனனேகுப்பா  தோல்வி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Election result 14 minster loss list


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->