பலரின் உயிரைப் பறித்த 40% கமிஷன்.. மனசாட்சியோடு வாக்களியுங்கள்.. ஒப்பந்ததாரர்கள் சங்கம் வேண்டுகோள்..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் வரும் மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலானது இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

தற்போது ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல்வேறு யுத்திகளை பயன்படுத்தி தேர்தல் பணி ஆற்றியுள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் தேர்தல் பணியாற்றியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவின் லிங்காயத் சமூகத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர். இத்தகைய அறிவிப்பு கர்நாடக அரசியலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே லிங்காயத்துகளின் பிரதிநிதியாக கருதப்படும் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கர்நாடக மாநில தேர்தலில் போட்டியிடுகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் 40% கமிஷனர் மாநிலம் சீரழிந்துள்ளதாக அறிக்கையின் மூலம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஜனநாயக முறைப்படி ஊழலற்ற மாநிலத்தை உருவாக்க வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. 

மேலும்  பல ஒப்பந்ததாரர்களின் உயிரைப் பறித்த 40 சதவீத கமிஷன் என்ற ஊழல்வாதிகள் நம் அன்புக்குரிய மாநிலத்தில் அச்சமளிக்கும் நிலையை எட்டியுள்ளனர். பொதுமக்களும் குறைபாடுகளுடன் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் மனசாட்சிக்கு ஏற்ப வாக்கு செலுத்த வேண்டும் என மக்களை கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka State Contractors Association appeals to vote according to conscience


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->