கர்நாடக அரியணை யாருக்கு..? கிங் மேக்கராகும் குமாரசாமி.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தலில் 224 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில் 70% வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் மே 13 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளது. 

இந்த நிலையில் கர்நாடக மாநிலத் தேர்தல் இன்றைய கருத்துக்கணிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. அதன்படி,

ஜான் கி பாத் நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு::

பாஜக : 94 -117

காங்கிரஸ் : 91 – 106

மஜத : 14 – 24

மற்றவை : 0 – 2

ரிபப்ளிக் டிவி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக : 85-100

காங்கிரஸ் : 94-108

மஜத : 24-32

மற்றவை : 2-6

டிவி 9 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு :

பாஜக : 88-98

காங்கிரஸ் : 99-109

மஜத : 21-26

மற்றவை : 0-4

இந்த கருத்து கணிப்பின்படி கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும். இதனால் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மீண்டும் கிங்மேக்கராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில முதலமைச்சராக குமராசாமி மீண்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கர்நாடக மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka State Election exit Poll Release


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->