கூவம் ஊழலா? வெள்ளை அறிக்கை கோரும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.! அதிர்ச்சியில் திமுக தலைகள்! - Seithipunal
Seithipunal


"கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று சென்னை மேயர் பிரியாவுக்கு, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை சீரமைப்பதற்காக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

இதற்காக இந்த அறக்கட்டளைக்கு 2015 -2016 ஆம் ஆண்டு முதல் ரூ.1,479 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, தூர்வாருதல், அகலப்படுத்துதல், கரைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இந்த அமைப்பு செய்துள்ளது. 

இந்த இரு ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த மக்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் குடியமர்த்தி உள்ளது. மேலும் ஆறுகளில் கழிவுநீரைக் கொட்டும் குழாய்களை அடைப்பதற்காக மற்றும் சுற்றுச்சுவர், வேலிகளை அடைப்பதற்காக நிதி செலவிட்டுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் தற்போதைய சவால்கள், ஆற்றின் நிலை, திட்டமிடப்பட்ட மற்றும் உண்மையான விளைவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று, மேயர் பிரியாவுக்கு எம்.பி.கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே, திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை கார்த்தி சிதம்பரம் தெரிவித்து வரும் நிலையில், கூவம் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழல் நடந்திருக்குமோ என்ற கோணத்தில் வெள்ளை அறிக்கை கோரி இருப்பது திமுக தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் தவறு என்றால் தட்டி கேட்போம் என்ற கொள்கையோடு கார்த்தி சிதம்பரம் செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karti chidambaram letter to MayorPriya Koovam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->