அடுத்த ஊழல் பட்டியல் ரெடி.."வழக்குகளை சந்திக்க அண்ணாமலை தயார்".. பாஜக கரு.நாகராஜன் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் 45 இடங்களில் பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவு செய்யப் போவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கரு.நாகராஜன் "திமுக தலைவர்களின் சொத்துக்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும் பொழுது தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் அதனை காட்டவில்லை. திமுக தலைவர்களான கனிமொழி, கே.என் நேரு, பொன்முடி, துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் காட்டவில்லையே என கேட்டால் அது சொத்து பட்டியல் என சொல்கிறார்கள். 

கணக்கில் வராத சொத்துக்களை குவித்ததால் தான் பல மாநில அமைச்சர்கள்,  பல மாநில முதல்வர்கள் சொத்து குவிப்பு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாதா.? அதனால் பதவி இழந்தவர்களை எல்லாம் நாம் பார்த்ததில்லையா..? 

ஊழல் பட்டியல் என வெளியிட்டால் அதனை சொத்து பட்டியல் என கூறி மக்களை திசை திருப்ப பார்க்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தகுந்த பதில் காத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் அடுத்த பட்டியல் வெளியிடப்படும். திமுக சார்பில் மானம் நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தால் அதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயம் சந்திப்பார்" என செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karu Nagarajan said Annamalai will meet DMK case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->