முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மனைவி ஜெர்மனி பயணம்.. எதற்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


கருணாநிதி மனைவி ராஜாத்தி அம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமானவர் ராஜாத்தி அம்மாள். இவர் கடந்த சில மாதங்களாக செரிமானக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ராஜாத்தி அம்மாள் மேல் சிகிச்சை பெறுவதற்காக இன்று ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவருடன் கனிமொழி எம்பி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். ராஜாத்தி அம்மாள் ஜெர்மனியில் 2 வாரங்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று மீண்டும் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karunanidhi wife rajathi ammal travelling to Germany


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->