திகார் சிறையில் இருந்து விடுதலையான கவிதா!..ஜெய் தெலுங்கானா என்று முழக்கம்!
Kavita released from Tihar Jail Slogan Jai Telangana
டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அங்கு புதிய மதுபான கொள்கை திட்டத்தை அமல்படுத்தியது. இதனால், தனியார் மதுபான நிறுவனங்களுக்கு ஆதரவாக மதுபான கொள்கைகள் கொண்டுவரப்பட்டதாகவும், தனியார் நிறுவனங்கள் டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க, உரிமம் வழங்க ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் குறிப்பாக டெல்லியில் மதுபான கடைகள் அமைக்க உரிமம் பெற சவுத் குரூப் நிறுவனம் ஆம் ஆத்மி கட்சி முக்கிய தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறையினர் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்டையே, சவுத் குரூப் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியும், தெலுங்கானா முன்னாள் முதலமைச்சரான சந்திரசேகர ராவின் மகளான எம்.எல்.ஏ. கவிதாவை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட கவிதாவை பணமோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகளும் கைது செய்தனர்.
இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கவிதா சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து வெளியே வந்த அவர் ஜெய் தெலுங்கானா என்று முழக்கமிட்டார்.
English Summary
Kavita released from Tihar Jail Slogan Jai Telangana