பாஜக இனவெறி கட்சி.. திமுகவினருக்குப் "பாவம், புண்ணியம் தெரியாது".! கொந்தளித்த கே.சி வீரமணி.!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினருக்கு மின் இணைப்பு, குடிநீர் வசதி, ரோடு வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் இங்கு வசித்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த பகுதிகளை நீர்நிலைப் புறம்போக்கு என நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் கடந்த 2022 ஜூன் மாதம் அங்கு வசித்த மக்கள் அப்புறப்படுத்தி வீடுகள் இடித்து தரைமட்டமக்கியது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படாததால் வீடுகளை இழந்த மக்கள் அகதிகளைப்போல செல்வது அறியாமல் 713 நாட்களை கடந்தும் இன்று வரை அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சாதிக்பாட்ஷா நகர் விவகாரம் தொடர்பாக தி.மு.க அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதைத்தொடர்ந்து  ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம் சுகுமார் தலைமையிலான அதிமுகவினர் வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பேசுகையில் "திமுக பொய் பிரசாரம் செய்தததை நம்பி சிறுபான்மையின மக்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி வீடுகளை இடித்தீர்கள். உத்தரவுக்கு நாம் எல்லோருமே அடிப்பணிய வேண்டும். 

ஆனால் மாற்று இடம் வழங்கிவிட்டுதான் அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் சொன்னதே... அதைச் செய்தீர்களா?. திமுகவினருக்குப் பாவம், புண்ணியம் தெரியாது. பாஜக என்ற இனவெறி கட்சியோடுச் சேர்ந்துகொண்டு பொய் பிரசாரத்தை முன்னிறுத்துகிறார்கள். பாஜகவைத் தமிழ்நாட்டுக்கு அடையாளம் காட்டியதே கருணாநிதியின் குடும்பம்தான். காலச்சூழல் காரணமாக அதிமுக சிறிதுகாலம் பாஜக கூட்டணியில் இருந்தது.

அதற்காக நம்முடைய உரிமையை விட்டுக்கொடுத்தோமா.? என்ன குறைகளை கண்டுபிடித்தீர்கள். எதை விட்டுக்கொடுத்தோம். பாஜகவுடன் இனி ஒட்டுமில்லை, உறவுமில்லை என எடப்பாடியார் தெளிவாகச் சொல்லிவிட்டார். சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பாக இருப்போம்" என பாஜகவையும் திமுகவையும் வெளுத்து வங்கியுள்ளார் கே.சி வீரமணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kc veeramani critiziced dmk mkstalin bjp


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->