#BREAKING | கேரள ஆளுநர் சாலையில் அமர்ந்து போராட்டம்.!! வைரலாகும் வீடியோ.!!
Kerala governor arif Mohammad Khan protest on road side
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளும் கட்சிகளுக்கும் ஆளுநருக்கு இடையே முட்டல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. எதிர்க்கட்சியாலும் மாநிலங்களில் மத்திய பாஜக அரசு ஆளுநர்களை வைத்து தனது அதிகாரத்தை செலுத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அந்த வகையில் கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவில் பினராய் விஜயனுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே முதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த மோதல் பக்கம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. கேரளா அரசு போன்று கேரளாவில் உள்ள மாணவர் சங்கங்களும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கேரள மாநில போலீசார் கட்டுப்படுத்தவில்லை எனக் கூறி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நிலமேல் பகுதியில் டீக்கடையின் அருகே காரை நிறுத்த சொன்ன ஆரிப் முகமது கான் அங்கிருந்த சேர் எடுத்து சாலையில் போட்டு அமர்ந்தபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Kerala governor arif Mohammad Khan protest on road side