கேரளா செவிலியர் பிரியாவுக்கு யேமனில் மரண தண்டனை! அதிரவைக்கும் பின்னணி!
Kerala Woman Death Penalty in yemen
யேமனில் யேமன் குடிமகனை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற, அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்துள்ள நிலையில், தண்டனை ஒருமாதத்துக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னணி:
கேரளா: பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த நிமிஷா பிரியா, 2008ஆம் ஆண்டு யேமனில் சென்று செவிலியராக பணியாற்றினார். அங்கு, யேமனுக்காரர் தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து கிளினிக் ஒன்றை தொடங்கினார்.
மஹ்தி நிதியை தவறாக பயன்படுத்தியதால் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மஹ்தி, நிமிஷாவின் பாஸ்போர்ட்டை தடுத்துவைத்து தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த தகராறின் போதே மஹ்தி கொல்லப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு சனா நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. யேமன் சட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட குடும்பம் இழப்பீடு தொகையை ஏற்றால் தண்டனை ரத்து செய்யலாம் என்ற வாய்ப்பு இருந்தது.
இதற்காக நிமிஷா பிரியாவின் தாய், இந்திய தூதரகத்தின் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், பாதிக்கப்பட்ட குடும்பம் தொகையை நிராகரித்த நிலையில், யேமன் அதிபர் ரஷீத் முகமது அல்-அம்மி தண்டனையை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தார்.
English Summary
Kerala Woman Death Penalty in yemen